சுப்பிரமணியசாமி கோவிலில் தேர் திருவிழா
ADDED :4609 days ago
அம்மையார்குப்பம்: சுப்பிரமணியசாமி கோவிலில், தேர் திருவிழா நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.ஆர்.கே.பேட்டை அடுத்த அம்மையார்குப்பம் சுப்பிரமணியசாமி கோவில் பிரம்மோற்சவம், கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்ö தேர் திருவிழா நடந்தது.காலை, 10:00 மணிக்கு கோவில் வளாகத்தில் இருந்து, மேளதாளத்துடன் புறப்பட்ட தேர், பகல், 12:00 மணியளவில், அறநெறி தமிழ் சங்கம் தெருவில் நிöத்தப்பட்டது. கரும்பு, பனை குருத்து, தென்னங்குலை ஆகியவற்றால் தேர் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.தேரில் பவனி வந்த முருகப் பெருமானை தரிசித்த பக்தர்கள் உப்பு, மிளகு உள்ளிட்டவற்றை தேர்மீது தூவி, தங்களின் நேர்த்திக் கடனை செலுத்தினர். பின்னர், அங்கிருந்து தேர் புறப்பட்டு கோவில் வளாகத்தை வந்தடைந்தது. நாளை வள்ளி திருமணம் நடைபெறுகிறது.