சென்னையில் ஆற்றுக்கால் பகவதி பொங்கல் விழா!
ADDED :5002 days ago
பத்தினி தெய்வம் கண்ணகி கேரளத்திலுள்ள ஆற்றுக்காலில் பகவதியாக வீற்றிருந்து அருள்புரிகிறாள். மாசிமாதம் இங்கு நடக்கும் பொங்கல் விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்பிகையின் அருளைப் பெறுகின்றனர். இந்த விழா தமிழகத்தில் உள்ள பகவதி அம்மன் பக்தர் களாலும், கடந்த நான்கு ஆண்டுகளாக சென்னையில் நடத்தப்படுகிறது. ஐந்தாவது ஆண்டு பொங்கல் விழா சென்னை நூம்பல் ஐ.சி.எல். ஹோம் டவுனில் பிப்.26 காலை 8.50க்கு தொடங்குகிறது. 10.45க்கு பண்டார அடுப்பு பற்ற வைத்தல், மதியம் 1க்கு பொங்கல் பூஜை, தொடர்ந்து அன்னதானம் நடக்கிறது. பொங்கலில் பங்கேற்க விரும்புவோர் விழாக்குழு தலைவர் தேவ் ஆனந்தை தொடர்பு கொள்ளலாம்.
போன்: 94446 42407, 94456 24437.