உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கதிர்வேய்ந்த மங்கலம்!

கதிர்வேய்ந்த மங்கலம்!

கவிச்சக்கரவர்த்தி கம்பர் காளிதேவியின் பக்தர். பல சந்தர்ப்பங்களில் காளி அவருக்கு அருள்பாலித்திருக்கிறாள். ஒருநாள் இரவில் வீட்டுத்திண்ணையில் கம்பர் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தார். பெருமழை பெய்து வெள்ளம் பெருக்கெடுத்தது. ஆனால், திண்ணையில் படுத்திருந்த கம்பர் மீது துளி மழைநீர் கூட விழவில்லை. அவ்வூரில் இருக்கும் அம்பிகை நெற்கதிர்களால் கூரை வேய்ந்து அவர் மீது மழை விழாமல் செய்தாள். அத்தலம் கதிர் வேய்ந்த மங்கலம் என்று அழைக்கப்பட்டு தற்போது கதிராமங்கலம் எனப்படுகிறது.  இங்குள்ள அம்பிகை வனதுர்க்கை என்ற
திருநாமத்தோடு அருள் பாலிக்கிறாள். கும்பகோணம் அருகில் இவ்வூர் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !