5 வயதில் நான்கு முனிவர்கள்!
ADDED :5002 days ago
தட்சிணாமூர்த்தியின் காலடியில் அமர்ந்திருக்கும் சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய நான்கு முனிவர்களும் சகோதரர்கள். பிரம்மாவின் பிள்ளைகள். இவர்கள் மார்க்கண்டேயர், தத்தாத்ரேயர், சுகப்பிரம்மர் போல என்றும் இளைஞர்களாக இருப்பவர்கள். அதிலும், இந்த நான்கு பேரும் ஒரேநாளில், பிரம்மாவின் மனதில் இருந்து தோன்றியவர்கள். இவர்கள் எப்போதுமே ஐந்து வயதுள்ள பிள்ளைகளாகவே இருந்தனர். சிற்பக்கலைஞர்கள் தான் இவர்களை இளைஞர்கள் போல் வடித்து விட்டனர். என்றும் குமரனாகவே இருப்பவர்கள் என்பதால் இவர்களை குமார அவதாரத்தினர் என்பர். இன்னொரு கொசுறுத் தகவல்: மகாவிஷ்ணு தசாவதாரம் எடுத்ததே நமக்குத் தெரியும். ஆனால், அவர் 24 அவதாரங்கள் எடுத்துள்ளார். அதில் ஒன்று குமார அவதாரம்.