ஹஜ் பயணிகள் குறைதீர் முகாம்!
ADDED :4604 days ago
மதுரை: மதுரை ரேஸ்கோர்ஸ், பாரதி உலா ரோடு, மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் மார்ச் 7, காலை 11 க்கு, ஹஜ்யாத்திரை செல்லும் பயணிகளுக்கான குறைதீர் முகாம் நடக்க உள்ளது. ஹஜ் செல்ல பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்தோரும், விண்ணப்பம் நிலுவையில் உள்ளோரும் பங்கேற்கலாம். புதிதாக விண்ணப்பித்தோர் வரத்தேவையில்லை. ஒரிஜினல் ஆவணங்களுடன், பைல்-எம், ஹஜ் செல்வதற்கான கடிதம் கொண்டு வரவேண்டும். ஹஜ் செல்வோர் விண்ணப்பங்களை மார்ச் 20க்குள் அனுப்ப வேண்டும், என, பாஸ்போர்ட் அலுவலர் மணீஸ்வரராஜா தெரிவித்துள்ளார்.