விளக்கெடுக்க புறப்படுங்க!
ADDED :4994 days ago
108 திவ்யதேசங்களில் ஒன்றான திருக்கோஷ்டியூரில் சவுமியநாராயணர் கோயில் உள்ளது. இரணியனைக் கொல்வதற்கு விஷ்ணுவின் தலைமையில் தேவர்கள் கோஷ்டியாக வந்துதங்கியதால் "திருக்கோஷ்டியூர் என்ற பெயர் உண்டானது. பெருமாள் நின்ற, அமர்ந்த, சயன கோலத்தில் காட்சியளிக்கிறார். அஷ்டாங்கவிமானம் உள்ள கோயில்களில் இதுவும் ஒன்று. இங்கு மாசிமகவிழா சிறப்பு. அன்று சவுமியநாராயணர் தெப்பத்தில் வலம் வரும்போது விளக்கு பிரார்த்தனை நடக்கும். வேண்டுதல் நிறைவேறப் பெற்றவர்கள் தெப்பக் குளக்கரையில் விளக்கேற்றி வைப்பர். அந்த விளக்கை நினைத்தது நிறைவேற வேண்டி பக்தர்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்வர். வேண்டுதல் நிறைவேறியதும், அடுத்த மாசிமகத்தன்று இந்த விளக்கோடு மற்றொரு புது விளக்கையும் சேர்த்து தெப்பத்தில் ஏற்றி வைக்கிறார்கள்.