உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உஷ்ண வியாதி தீர்க்கும் குளம்

உஷ்ண வியாதி தீர்க்கும் குளம்

அக்னி வழிபட்ட சிவத்தலம் திருவாரூர் மாவட்டம் திருவீழிமிழலை அருகிலுள்ள (4 கி.மீ.,) அன்னியூர் அக்னீஸ்வரர் கோயில். இங்கு சிவன் அக்னீஸ்வரராகவும், அம்பிகை கவுரியம்மையாகவும் அருள்புரிகின்றனர். தட்சனின் வேள்வியில் கலந்துகொண்ட பாவம் நீங்க, அக்னி சிவபூஜை செய்தார். காத்யாயன முனிவரின் மகளாகத் தோன்றிய அம்பிகை, சிவனைத் திருமணம் செய்வதற்காக தவம் செய்ததாக தலவரலாறு கூறுகிறது. மாசிமகத்தன்று இங்குள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடினால் முன்வினைப் பாவம் நீங்கும். உஷ்ணவியாதிகள் நீங்கும். கன்னிப்பெண்கள் கவுரியம்மையை விளக்கேற்றி வழிபட விரைவில் மணவாழ்வு கிடைக்கும். திருநாவுக்கரசரால் பாடப்பட்ட இத்தலம் அரிசிலாற்றின் கரையில் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !