உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தோழா நீயும் வாடா! உன்னால் முடியும்!

தோழா நீயும் வாடா! உன்னால் முடியும்!

*ஆரோக்கியம், மகிழ்ச்சி, அமைதி, வெற்றி இவற்றை வழங்கவல்ல பேரொளியாக இறைவன் இருக்கிறான். அந்தப் பேரொளியை நோக்கி திரும்புங்கள்.
*உண்மையான வெற்றி என்பது உங்களை நீங்களே வெல்வதில் தான் இருக்கிறது. தன்னை வென்றவன்,இயற்கையின் மீது கூட, ஆதிக்கம் செலுத்தும் ஆற்றலைப் பெறுகிறான்.
*வாழ்வில் சந்திக்கும் துன்பம், சோதனை இவற்றால் மனநிலை பாதிக்கும். இருந்தாலும் விடாமுயற்சியைக் கைவிடாதீர்கள். தோல்விக்கான காரணத்தை அறிந்து அதை திருத்த முயலுங்கள்.
*தோழனே! ஒரு செயலில் வெற்றி பெற முடியாதோ என எண்ணாதே. முன்வந்து பார். உன்னால் நிச்சயம் வெல்லமுடியும்! எத்தனை முறை தோற்றாலும் முயற்சியை கைவிடாதவனே உண்மையானவெற்றியாளன். அவனை உலகமே தோல்வியாளனாகக் கருதினாலும், மனதளவில் அவன் ஒரு வெற்றியாளனே.
*உங்களை மற்றவர் களோடு அழகு, செல்வம், பலம் இவற்றின் அடிப்படையில் ஒப்பிட்டுக்கொள்ளாதீர்கள். இதனால் பொறாமை உணர்வு வளர்கிறது என்ற உண்மையை உணருங்கள்.
*நீங்கள் என்னவாக இருந்தாலும் அதைப் பற்றிபெருமிதம் கொள்ளுங்கள். உங்களுடைய தனித்தன்மை உலகில் வேறு யாருக்குமில்லை. நீங்கள் இறைவனின் ஒப்பற்ற படைப்பு.
*உங்களிடமுள்ள நல்ல, கெட்ட எண்ணங்கள் இரண்டையும் கவனிக்கத் தொடங்குங்கள். மனம் என்னும் வயலில் தீயஎண்ணம் என்னும் களைகளைப் பிடுங்கி எறியுங்கள். நல்ல எண்ணம் என்னும் பயிரை மட்டும் வளர விடுங்கள்.
*ஒருபோதும் உங்களுடைய குறைபாடுகளைக் கண்டு மனம் தளராதீர்கள். மனம் தளரும்போது தோல்வி மனப்பான்மை உருவாகிவிடுகிறது. இதற்கு இடமளிக்கக் கூடாது.
*ஒவ்வொரு நாளும் இரவு தூங்கச் செல்லும் முன்உள்முகமாக சிந்தியுங்கள்.இதனால், அறியாமை விலகி உள்ளார்ந்த அறிவு தென்படத் துவங்கும்.
*எந்த ஒரு விஷயத்திலும் பேச்சளவில் இது தான் குறிக்கோள் என்று வேகமாகத் தீர்மானிக்கிறோம். ஆனால், அதற்கான முயற்சியில் இறங்கும்போது தயங்குகிறோம்.
*""இன்று விட்டுவிடலாம். நாளை பார்த்துக் கொள்வோம் என்றுஒருபோதும் உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளாதீர்கள். ஊக்கத்துடன் செயல்படுவதில் வெற்றி அடங்கியிருக்கிறது.
*மற்றவர்கள் உங்களுக்குஎதிராக என்ன கூறினாலும் பொருட்படுத்த வேண்டாம். இறைவன் உங்களோடுஇருக்கிறார். நீங்கள் அவனோடு இருக்கிறீர்கள். மற்றதைப் பற்றி என்ன கவலை?
*நீங்கள் பிறரால் அச்சுறுத்தப்படும்போது, அமைதியைசிறிதும் இழக்காதீர்கள். இந்தநிலையை எட்டிவிட்டால்நம்மிடம் இருக்கும் "தான் என்ற அகந்தை உணர்வை வெற்றி பெற்றுவிட்டதாகப் பொருள்.
*இறைவன் உலகில் ஒரு குறிப்பிட்ட பணிக்காகவே உங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறான். அந்த வாய்ப்பைசரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
*வேலையின் காரணமாக இறைவனையோ அல்லது இறைவனுக்காக வேலையையோ புறக்கணிக்காதீர்கள். இறைவனை மகிழ்விப்பதற்காக பணியாற்றுகிறோம் என்ற எண்ணத்துடன் வேலை செய்யுங்கள்.
-யோகானந்தர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !