உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தியாகதுருகம் அம்மன் கோவில் திருவிழா

தியாகதுருகம் அம்மன் கோவில் திருவிழா

தியாகதுருகம்: தியாகதுருகம் கருமாரியம்மன் கோவில் மாசித்திருவிழா நடந்தது.தியாகதுருகம் மார்கெட் கமிட்டி அருகே உள்ள கருமாரியம்மன் கோவில் மாசித்திருவிழா கடந்த மாதம் 28ம் தேதி துவங்கியது. தினமும் இரவு மாரியம்மன் சரித்திர பாரத சொற்பொழிவு நடந்தது. 6ம்தேதி மோடி எடுத்து கழுமரம் ஏறுதலும், காத்தவராயன், ஆரியமாலா திருக்கல்யாண உற்சவமும் நடந்தது.நேற்று முன்தினம் காலை கோவில் வளாகத்தில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். அலங்கரிக்கப்பட்ட அம்மன் தேரில் வைத்து அலகு குத்தி ஊர்வலமாக இழுத்து சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில் தர்மகர்த்தா குழுவினர் வேலு, ராமு, வெள்ளையன், தே.மு. தி.க., ஒன்றிய செயலாளர் ஜெய்சங்கர், பிச்சைப்பிள்ளை சேகர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !