கோயில் திருப்பணிக்கு ரூ.1.10 லட்சம் நிதியுதவி
ADDED :4626 days ago
செஞ்சி: செஞ்சி அருணாசல ஈஸ்வரர் கோயில் திருப்பணிக்கு திருவேங்கடகிரி கோயிந்த நாம சபா நடைபயண குழுவினர் 1.10 லட்சம் ரூபாய் நிதி வழங்கினர்.செஞ்சி பீரங்கிமேட்டில் பழமையான அருணாசல ஈஸ்வரர் கோயில் திருப்பணிகள் நடந்து வருகின்றன. இதில் ஒரு பகுதியாக 20 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக வெங்கடேச பெருமாளுக்கு தனி சன்னதி கட்டி வருகின்றனர்.இந்த சன்னதி திருப்பணிக்காக, திருவேங்கடகிரி கோயிந்த நாம சபாவை சேர்ந்த உறுப்பினர்கள் சார்பில் 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கினர்.சபை தலைவர் வி. சீத்தாராமன், செயலாளர் சி.சீத்தாராமன், பொருளாளர் பூங்காவனம் ஆகியோர் திருப்பணிக்குழு தலைவர் டாக்டர் ரவிச்சந்திரனிடம் நிதியை வழங்கினர்.