உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயில்களில் சிறப்பு வழிபாடு

கோயில்களில் சிறப்பு வழிபாடு

புதுக்கோட்டை: சிவன் கோயில்களில் நேற்று மஹா சிவராத்திரியை முன்னிட்டு நடந்த சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகளில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். புதுக்கோட்டை சாந்தநாத ஸ்வாமி கோயில், திருக்கோகர்ணம் கோகர்ணேஸ்வரர் கோயில், திருவேங்கைவாசல் வியாகபுரீஸ்வரர் கோயில், நெடுங்குடி கைலாசநாதர் கோயில், ஆவுடையார்கோயில் ஆத்மநாத ஸ்வாமி கோயில் உள்ளிட்ட அனைத்து சிவன் கோயில்களிலும் நேற்று மஹா சிவராத்திரியை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தது. நெடுங்குடி கைலாசநாதர் கோயிலில் சிவராத்திரி விழாவையொட்டி, கலை பண்பாட்டுத்துறையின் சார்பில், இரவு விடியவிடிய கலை நிகழ்ச்சிகள் நடந்தது. புதுக்கோட்டையில் ஈஷா யோகா மையத்தின் சார்பில் நடந்த சிவராத்திரி விழாவில், குருபூஜை, மஹாமந்திர உட்சாடனை, கூட்டு தியானம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. அரிமளம் அடுத்த சத்திரம் ஸ்ரீ காமாட்சியம்மன் கோயிலில் சிவராத்திரி விழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை முதல், இரவு விடியவிடிய சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !