உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகா சிவராத்திரி வழிபாடு

மகா சிவராத்திரி வழிபாடு

சிவகங்கை: மகா சிவராத்திரியை முன்னிட்டு, சிவன் கோயில்கள்,கிராமப்புற கோயில்களில் சிறப்பு அபிஷேகம்,ஆராதனை நடந்தது. நேற்று மகா சிவராத்திரியை முன்னிட்டு மாவட்ட அளவில் உள்ள சிவன் கோயில்களில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. கிராமப்புறங்களில் காவல் தெய்வங்களான அய்யனார், முனீஸ்வரர், கருப்புச்சாமி, காளியம்மன் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும், நேற்று மாலை சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. சிவராத்திரியை முன்னிட்டு, நகர்ப்புறங்களை சேர்ந்தவர்கள், தங்களது குலதெய்வங்கள் வீற்றிருக்கும், கிராமங்களுக்கு குடும்பத்தாருடன் சென்று, நேர்த்தி செலுத்தினர். இதனால், அனைத்து பஸ்களிலும் கூட்ட நெரிசல் காணப்பட்டது. திருப்புவனம்: திருப்புவனத்தில் உள்ள தண்டீஸ்வரர், அய்யனார் கோயில், பத்ரகாளியம்மன் கோயில் உள்ளிட்ட கிராமப்புற கோயில்களில் சிவராத்திரியை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !