108 கலச அபிஷேகம் !
ADDED :4631 days ago
பல்லடம்: மஹா சிவராத்திரியை முன்னிட்டு, சித்தம்பலம் கோளறுபதி நவகிரகக் கோட்டை கோவிலில், கோவை காமாட்சிபுரம் ஆதினம் சிவலிங்கேஸ்வர சுவாமி தலைமையில், கோ பூஜை, 27 அக்னி குண்டங்கள் நட்சத்திர வேள்வி நடந்தது. அதன்பின், இரண்டாம் கால வேள்வி, சிவபெருமானுக்கு மூலமந்திர வேள்வி, அபிஷேகம், 108 கலச அபிஷேகம், 108 பால்குட அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. நேற்று அதிகாலை 3.00 மணிக்கு, நான்காம் கால வேள்வி, அம்மையப்பர் மூலமந்திர வேள்வி, மகா அபிஷேகம் நடத்தப்பட்டது. காலை 6.00 மணிக்கு ஐந்தாம் கால வேள்வி, சிவபெருமானுக்கு மகா வேள்வி, அபிஷேகம் மற்றும் அம்மையப்பர் வீதி உலா நடந்தது.