உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மழலை அருளும் பரிகாரம்!

மழலை அருளும் பரிகாரம்!

மனித வாழ்வைத் தெரிந்து கொள்ள உதவும் சாஸ்திரம் ஜோதிடம். ஜாதகத்தில் ஐந்தாம் பாவத்தை புத்திரபாவம், பூர்வபுண்ணியம் என்பர். இந்த பாவம் பலவீனமாக இருந்தால் ஒரு ஜாதகருக்கு பிள்ளைப்பேறு வாய்க்காமல் தாமதமாகும். சிலருக்கு பிள்ளைகள் பிறந்தும் ஆரோக்கியக்குறைவால் அவதிப்படநேரிடும்.  ஐந்தில் ராகு, கேது போன்ற சர்ப்பகிரகங்கள் இருந்தாலும் ஆண் குழந்தை வாய்க்காமல் போவதுண்டு. அல்லது சுகப்பிரசவம் ஆகாமல் அறுவைசிகிச்சை செய்யநேரிடும். இதிலிருந்து மீள்வதற்கு சஷ்டிவிரதம் சிறந்த பரிகாரம். வளர்பிறை சஷ்டியன்று முருகப்பெருமானை வேண்டி இவ்விரதம் இருப்பர். அன்று மதியம் மட்டும் சாப்பிட வேண்டும். இயலாதவர்கள் காலை மற்றும் இரவில் மித ஆகாரமாக பால், பழம் சாப்பிடலாம். மாலையில் முருகன் கோயிலுக்குச் சென்று சந்நிதியில் தீபமிட வேண்டும். காலை மாலை இருவேளையும் மனத்தூய்மையுடன் கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்யவேண்டும். ஓம் முருகா ஓம் சரவணபவ என்னும் மந்திரத்தை 108 முறை ஜபிக்க வேண்டும். சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வளரும் என்பது ஆன்றோர் வாக்கு. குறைந்தபட்சம் ஒரு வருடமாவது வளர்பிறை சஷ்டியில் விரதம் மேற்கொள்வது போதுமானது. முருகப்பெருமான் குடிகொண்டு இருக்கும் குன்றினை வலமாக (கிரிவலம்) வருவது மிகவும் சிறப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !