உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடன் தீர்க்கும் பொடி

கடன் தீர்க்கும் பொடி

அபிஷேகப்பிரியன் என்று சிவபெருமானைப் போற்றுவர். நாம் அபிஷேகத்திற்கு பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளுக்குத் தகுந்த சுப பலன் உண்டு என்று காரண ஆகமம் கூறுகிறது.  கடன் தொல்லையை காலைச் சுற்றிய பாம்பும் வாங்கிய கடனும் தீண்டாமல் விடுவதில்லை என்பர். கொடிய கடன் தொல்லையில் இருந்து மீள வேண்டுமானால் பிரதோஷம், மாத சிவராத்திரி வேளையில், சிவலிங்க அபிஷேகத்திற்காக மாப்பொடி(பச்சரிசிமாவு) கொடுப்பது மிக எளிய பரிகாரமாகும். ஊறவைத்த பச்சரிசியை காயவைத்து, இடித்துப் பொடியாக்கினால் மாப்பொடி கிடைத்துவிடும். மாப்பொடி அபிஷேகத்தைப் பார்த்தாலும் பலன் கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !