உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நிம்மதியான உறக்கம் தேவையா!

நிம்மதியான உறக்கம் தேவையா!

நிம்மதியாக உறங்கினால் மட்டுமே ஒரு மனிதனால் அன்றாடப்பணிகளைச் சரிவர செய்யமுடியும். அதிலும் குறை ஏற்பட்டால் என்ன தான் செய்வது? தூக்கத்திலும் நிம்மதியில்லாவிட்டால் நம் பாடு கஷ்டம் தான். பயங்கரமான கனவுகள், வேண்டாத சிந்தனைகள், பயத்தில் அலறுவது போன்ற பிரச்னைகளால் தூங்கமுடியாமல் அவதிப்படுவர்கள் காளியம்மனை வழிபடுவது சிறப்பான பரிகாரம். ஒன்பது வெள்ளிக்கிழமை தொடர்ந்து காளியம்மன் கோயிலுக்குச் சென்று வழிபடுங்கள். வாரம்தோறும் ஒரு எலுமிச்சம்பழத்தைக் கொடுத்து அம்மனின் பாதத்தில் வைத்து வாங்கிக் கொள்ளுங்கள். அதை தலையணையில் வைத்துக் கொண்டு தூங்கத் தொடங்குங்கள். எந்த பிரச்னையும் நேராமல் நிம்மதியாக  தூங்க அம்பிகை துணை
யிருப்பாள்.  தினமும் காலையில் நீராடியதும், திருவிளக்கின் முன் அமர்ந்து ஓம்காளி என்னும் மந்திரத்தை 108 முறை ஜெபியுங்கள். நாள்முழுக்க வேலை செய்யும்போதும், இயன்ற பொழுதெல்லாம் இம்மந்திரத்தை ஜெபித்து வந்தால் காளியருள்
கவசம் போல உங்களைச் சுற்றிப் பாதுகாப்பதை உணர்வீர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !