அடிக்கடி காய்ச்சல் ஜலதோஷமா?
அடிக்கடி காய்ச்சல், தலைவலி, ஜலதோஷம் என்று ஏதாவது ஒரு தொந்தரவு உண்டாகிக் கொண்டே இருக்கும். என்ன கொடுமைசார் இது! தானுண்டு தன் வேலையுண்டு என்று நான் இருக்கணும் நினைச்சாலும் ஏதாவது ஜலதோஷம், இருமல் தொந்தரவுகள் ஒன்று விரட்டுதே! என்று புலம்பும் அளவிற்கு உடல்நிலை பாடாய்படுத்தும். அப்படிப்பட்டவர்கள் சிவனை அல்லது முருகனை சரணடைந்து விட்டால் பிரச்னை இருந்த இடம்
தெரியாமல் மறைவதை உணர முடியும். சிவனை வழிபட நினைப்பவர்கள், நெற்றியில் விபூதி இட்டுக் கொண்டு பின்வரும் தேவாரத்தை 12முறை பாராயணம் செய்வது நல்ல பலன் தரும். மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு தந்திரமாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு செந்துவர் வாயுமை பங்கன் திருவாலவாயான் திருநீறு திருஞானசம்பந்தர் இப்பாடலைப்பாடி பாண்டிய மன்னன் கூன்பாண்டியனின் வெப்புநோயை (காய்ச்சல்) தீர்த்தருளினார். முருகனை வழிபடுவோர் காலை, மாலை நேரங்களில் நெற்றியில் திருநீறு அணிந்த படியே கந்தசஷ்டி கவசத்தைப் பாராயணம் செய்துவர உடல் ஆரோக்கியம் மேம்படும்.