துளசி மாடத்தை வீட்டின் முன்னால் வைப்பதா? பின்னால் வைப்பதா?
ADDED :4984 days ago
பின்பக்கமே வைக்க வேண்டும். இதற்கு ஒரு காரணம் உண்டு. காலையில் எழுந்ததும் வீட்டின் பின்கதவையே திறக்க வேண்டும். அப்போது துளசிமாடம் கண்ணில் படும். இது லட்சுமி கடாட்சத்தைத் தரும். பின்வாசல் வசதியில்லாவிட்டால், மொட்டைமாடியின் பின் பக்கம் வைக்கலாம். இவர்கள் ஜன்னல்களை முதலில் திறந்து விட்டு, அதன் பின் முன்வாசல் கதவைத் திறக்க வேண்டும். மொட்டை மாடிக்குச் சென்று துளசிமாடத்தைப் பார்த்தபின் பணிகளைத் துவக்கலாம். குளித்தபிறகு, துளசிமாடத்தில் நிறைகுடம் நீர் ஊற்ற வேண்டும்.