உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஒழுக்கத்தின் இன்னொரு பெயர்!

ஒழுக்கத்தின் இன்னொரு பெயர்!

சூரிய மண்டலம் எத்தனை பெரிது. அதைவிட நட்சத்திர மண்டலங்கள் எத்தனையோ இருக்கின்றனவாம். இத்தனையையும் செய்த கடவுள் எவ்வளவு பெரியவராக இருக்க வேண்டும்? அத்தனை பெரியவர், குழந்தைகளான நம் பிரார்த்தனையையும் கேட்கிறார்... புழு பூச்சியிலிருந்து, இந்த உலகத்தில் எல்லாவற்றுக்கும் தேவைப்படுகிற ஆகாரத்தையும் வைத்திருக்கிறார். அப்படியானால், அவரது இருதயத்தில் எத்தனை அன்பு இருக்க வேண்டும்? அன்பு மட்டுமல்ல. நாம் ஒழுங்கில்லாமல் தப்பும் தவறுமாகக் காரியம் செய்வது போலவா அவர் செய்கிறார்? அவரை ஏன் என்று கண்டிப்பதற்கு அவருக்கு மேல் எவரும் இல்லாவிட்டாலும், அவர் எத்தனை ஒழுங்கோடு தினமும் இந்தப் பூமியை ஒருமுறை சுழலவிட்டு பகலையும் இரவையும் படைக்கிறார்! இதே போல், இந்த பூமியைச் சரியாக ஒரு வருஷத்தில் சூரியனைச் சுற்றிவரச் செய்து, பலவிதமான பருவங்களை உண்டாக்குகிறார். ஒவ்வொன்றும் இப்படித் தான் இருக்க வேண்டுமென்று ஒழுங்கு செய்திருக்கிறார். நாமும் அவரைப் போல் மனசில் அன்பாக இருக்கவேண்டும். காரியத்தில் ஒழுங்காக இருக்க வேண்டும். இந்த ஒழுங்குக்குத் தான் தர்மம், அறம் என்று பெயர்.  அன்பும் அறமும் உருவான இறைவனை வேண்டினால் நமக்கு நல்ல குணங்கள் உண்டாகும். அவருடைய அருளை நினைத்து நன்றி செலுத்துவதே, மன அழுக்கை எல்லாம் போக்குகிற பெரிய ஸ்நானம் ஆகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !