உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமனின் முதல் பெற்றோர்!

ராமனின் முதல் பெற்றோர்!

கல்லாகப் போ என்று அகல்யாவை சபித்தார் அவரது கணவர் கவுதம ரிஷி. சாபவிமோசனம் வேண்டி கண்ணீர் சிந்தினாள். கவுதமரின் கல்மனம் இரங்கியது. ராமர் பாதம் பட்டு சாபம் தீரும் என்று விமோசனம் அளித்தார். மகாவிஷ்ணு ராமனாகப் பிறக்க வித்திட்டதால், அவருக்கு தந்தையாகி விட்டார் கவுதமர். அகல்யை ராமனின் வரவை எதிர் பார்த்து, அவரை மகனாக நெஞ்சில் சுமந்து விட்டதால் தாயாகி விட்டாள். கோசலை தன் வயிற்றில் ராமரைச் சுமப்பதற்கு முன்பே, ராமனை நெஞ்சில் சுமந்து தாயாகும் பாக்கியம் பற்றவள் அகல்யா. இதை உறுதிப்படுத்தும் விதத்தில் ராமரும் அகல்யாவை  அம்மா என்று அழைத்த விபரம் கம்பராமாயணத்தில் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !