ஸ்ரீரங்கம் அண்ணன் சுவாமி மதுரை கோயில்களுக்கு விஜயம்!
ADDED :4586 days ago
மதுரை: ஸ்ரீரங்கம் வரதநாராயணகுரு பரம்பரையைச் சேர்ந்த கந்தாடை வாதூல அண்ணன் சுவாமி மதுரை விஜய யாத்திரை செய்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். துவரிமான் வந்த அண்ணன் சுவாமியை வரவேற்பு குழுத்தலைவர் வேங்கட்டராமன் உள்ளிட்டோர் பூர்ணகும்ப மரியாதையுடன் வரவேற்றனர். அங்குள்ள ரங்கராஜப்பெருமாள் கோயிலுக்கு சுவாமி எழுந்தருளினார். திருமாளிகை குலதனமான அழகிய சிங்கப்பெருமாளுக்கு பூஜை நடத்தி பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். அழகர்கோவில் கள்ளழகர் கோயில், திருமோகூரில் காளமேகப்பெருமாள் கோயில், மதுரை கூடலழகர் கோயில்களுக்கு வருகை தந்த சுவாமிக்கு கோயில் சார்பில் கும்ப மரியாதை வழங்கப்பட்டது. இதையடுத்து திரளி, குச்சனூருக்கு சுவாமி விஜயம் செய்தார்.