உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செந்தூர் கோயிலில்இன்று பங்குனி உத்திர திருவிழா

திருச்செந்தூர் கோயிலில்இன்று பங்குனி உத்திர திருவிழா

திருச்செந்தூர்:திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று பங்குனி உத்திர திருவிழா நடக்கிறது.இதனை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு 4.30 மணிக்கு விஸ்வரூபம், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்து வள்ளியம்மன் தபசுக்கு புறப்பாடு நடக்கிறது. மதியம் 2.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மாலை 4.30 மணிக்கு சுவாமி புறப்பாடு மற்றும் சுவாமி அம்பாள் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்து திருவீதி வலம் வந்து இரவு 108 மகாதேவர் சன்னதி முன்பு வைத்து திருக்கல்யாணம் நடக்கிறது. கோயிலின் உபகோயிலான நாலுமூலைக்கிணறு அருள்மிகு குன்றுமேலய்யன் சாஸ்தா திருக்கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. பக்தர்களுக்கு தேவையான குடிநீர், மின்சாரம் மற்றும் பந்தல் வசதிகளும் கோயில் நிர்வாகம் செய்துள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் ஜெயராமன் ஆகியோர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !