உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உருவாட்டி பெரியநாயகி அம்மன் கோயில் தேரோட்டம்

உருவாட்டி பெரியநாயகி அம்மன் கோயில் தேரோட்டம்

காளையார்கோவில்: உருவாட்டி பெரிய நாயகி அம்மன் கோயில் தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.இக்கோயில் பங்குனி விழா மார்ச் 18ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சிறப்பு அபிஷேகம், அம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தல் நடந்தது. தீச்சட்டி, பால்குடம், பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர். முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை 6 மணிக்கு நடந்தது.சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர். உருவாட்டி கிராமத்தினர், சிவகங்கை தேவஸ்தான நிர்வாகத்தினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !