பங்குனி திருவிழா!
ADDED :4966 days ago
பழநி, திருப்பரங்குன்றத்தில் பங்குனி உத்திரம் சிறப்பாக நடக்கிறது. விரதமிருந்து பக்தர்கள் பால் காவடி தாங்கி, பழநி முருகனுக்கு அரோகரா! தண்டாயுதபாணிக்கு அரோகரா! என்று கோஷமிடும் ஒலி விண்ணைப் பிளக்கும். முதல்படைவீடான திருப்பரங்குன்றத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பிரம்மோற்ஸவம் நடக்கும். பத்துநாள் நடக்கும் விழாவில் சுவாதியில் திருக்கல்யாணமும், மறுநாள் தேரோட்டமும் நடக்கும். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் அறுபத்துமூவர் உற்சவம், சுவாமிமலை, திருச்செந்தூர் தலங்களில் வள்ளி கல்யாணம் நடக்கும். திருமால் தலங்களான ஸ்ரீரங்கம், உறையூரில் பங்குனி உத்திரம் நடந்த செய்தி இலக்கியமான அகநானூறில் உள்ளது.