உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கல்யாணப்பரிசு!

கல்யாணப்பரிசு!

சூரசம்ஹாரம் செய்த முருகனுக்கு வெற்றிப்பரிசாக இந்திரன் தன் மகள் தெய்வானையை திருமணம் செய்து கொடுத்தான். இந்த திருமண வைபவம் முதல்படைவீடான திருப்பரங்குன்றத்தில் நடந்தது. இதன்பின், முருகனுக்கு தெய்வானையின் பெயரால் தேவசேனாபதி என்ற பெயர் உண்டானது. இதற்கு தேவசேனா வின் கணவன் என்று பொருள். தெய்வானையை வடமொழியில் தேவசேனா என்பர். தெய்வானையை மணப்பதற்கு முன்னும் தேவசேனாபதி என்ற பெயர் முருகனுக்கு உண்டு. அதற்கு தேவர்களின் சேனைத்தலைவர் என்று பொருள். வள்ளியின் பெயராலும் வள்ளிமணாளன் என்ற பெயரும் அவருக்குண்டு. பெண்மையைப் போற்றும் விதத்திலும், மனைவிக்கு மதிப்பளிக்கும் நோக்கிலும் முருகப்பெருமான் இந்த பெயர்களால் குறிக்கப்படுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !