கடவுளுக்கும் திருஷ்டி கழிக்கிறார்களே?
ADDED :4961 days ago
தெய்வீகசக்தி, தீயசக்தி என இரண்டுமே உலகில் இருக்கின்றன. தெய்வமாக போற்றப்படும் சுவாமி விக்ரஹத்திற்கு பிராண பிரதிஷ்டை (சக்தியை அதிகரிப்பது) முறையாக ஜெபிக்கப்படும் மந்திர முயற்சியால் தான். உடலுக்கு உணவு போல சிலைகளுக்கு மந்திரங்கள் ஆற்றலைத் தருகின்றன. திருஷ்டி போன்ற தீயசக்திகளால் அவற்றுக்கு தீங்கு நேராதபடி காப்பதற்காக திருஷ்டி போக்குவது அவசியமாகிறது. முறையான மந்திரங்கள் சொல்லாத இடங்களில் தான் சிலை திருட்டு, சிதிலமாதல் போன்றவை நடக்கின்றன என்று கூட சொல்லலாம்.