நெல் அட்டிச்செல்லும் விழா!
ADDED :4961 days ago
திருவாரூர் அருகிலுள்ள சிவத்தலம் திருக்கோளிலி கோளிலிநாதர் கோயில். இங்குள்ள சிவலிங்கத்தின் மீது குவளை சாத்தப்பட்டிருக்கும். அமாவாசையன்று குவளையை நீக்கி அபிஷேகம் செய்வர். நவக்கிரங்களுக்கு ஏற்பட்ட தோஷம்போக்கிய சிவன் என்பதால், கோளிலிநாதர் என அழைக்கப்படுகிறார். இங்கு நவக்கிரங்கள் ஒரேமுகமாக தெற்குநோக்கி இருப்பது சிறப்பு. அம்பிகை வண்டார் பூங்குழலம்மை. சுந்தரருக்கு சிவபெருமான் நெற்குவியல் வழங்கிய நெல் அட்டிச் செல்லும் விழா மாசிமகத்தன்று நடக்கும். பஞ்சபாண்டவர்களில் ஒருவரான பீமன், பகாசுரனைக் கொன்ற பாவம் தீர இங்குள்ள பிரம்மதீர்த்தத்தில் நீராடினான். திருவாரூரிலிருந்து எட்டுக்குடி செல்லும் சாலையில் 19கி.மீ., தூரத்தில் கோயில் உள்ளது.