உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மீனம்: கடன் வாங்காதீர்!

மீனம்: கடன் வாங்காதீர்!

பெரியவர்களை மதித்து செயல்படுகின்ற மீனராசி அன்பர்களே!

இந்தமாதம், உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தில் ஐந்து கிரக சேர்க்கையில் சுக்கிரன் மட்டுமே நற்பலன் வழங்குகிற கிரகமாக இடம் பெறுகிறார்.  பேச்சில் சாந்த குணம் மிகுந்திருக்கும். சிரமமான நேரத்தில் தம்பி, தங்கைகள் செய்யும் உதவி மனதை நெகிழ வைக்கும். வீடு, வாகன வகையில் பாதுகாப்பு நடைமுறை அதிகப்படுத்துவது நல்லது. தாயின் உடல்நலம் பாதிக்கப்படலாம். மருத்துவ சிகிச்சை தேவைப்படும். புத்திரர்கள் கற்பனைத் திறன் வளர்ந்து செயலிலும், படிப்பிலும் முன்னேற்றம் அடைவர். பூர்வ சொத்தில் ஓரளவு வருமானம் கிடைக்கும்.  கடன்கள் செய்யும் நிர்ப்பந்தத்தினால் சொத்து அடமானத்தின் பேரில் பணம்பெற்று சிரமத்தை தவிர்க்க வேண்டி வரும் . புதிய கடன் வாங்குவதைத் தவிர்க்கவும்.  கணவன், மனைவி குடும்ப சூழ்நிலையைக் கவனத்தில் கொண்டு  ஒற்றுமையுடன் நடப்பர். தொழிலதிபர்கள் கையிருப்பில் உள்ள ஒப்பந்தங்களுக்கு ஏற்ப உற்பத்தியை விரைவுபடுத்த சிரமப்படுவர். லாபம் சுமாராக இருக்கும். வியாபாரிகள் நேரடி கண்காணிப்பின் மூலம் விற்பனையைத் தக்க வைப்பது நல்லது. எதிர்பார்த்த லாபத்திற்கு இடமில்லை. பணியாளர்கள், நிர்வாகத்தின் சட்டதிட்டங்களை மதித்து நடப்பதாலும், பொறுப்புடன் நடந்து கொள்வதாலும் மட்டுமே ஒழுங்கு நடவடிக்கை வராமல் தவிர்க்கலாம். குடும்பப் பெண்கள், சேமிப்பு பணத்தை செலவுகளுக்கு பயன்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் வரும்.  பணிபுரியும் பெண்கள் அனுபவம் நிறைந்தவர்களிடம் பணி சார்ந்த நுணுக்கங்களை அறிந்து வேலை செய்தால் தான் சலுகைகளுக்கு முயற்சிக்க முடியும்.சுயதொழில்புரியும் பெண்கள், கூடுமான வரையில் ரொக்கத்திற்கு பொருள் விற்பது நஷ்டத்தைத் தவிர்க்க உதவும். அரசியல்வாதிகள் தங்கள் ஆதரவாளர்களை அனுசரித்து செல்வதால் மட்டுமே, பெற்ற நற்பெயரை பாதுகாக்க இயலும். விவசாயிகள், அளவான மகசூல், கால்நடை வளர்ப்பில் ஓரளவு லாபம் பெறுவர். மாணவர்கள் எதிர்கால படிப்புக்குரிய நுழைவுத்தேர்வுக்கு மிகவும் கஷ்டப்பட்டு படிக்க வேண்டும். இல்லாதபட்சத்தில், விரும்பும் கல்லூரியில் இடம் கிடைக்க சிரமப்படும்.

பரிகாரம்: சாஸ்தாவை வழிபடுவதால் சிரமம் குறைந்து நற்பலன் பெறுவீர்கள்.
உஷார் நாள்: 25.4.13 அதிகாலை 5.41- 27.4.14 காலை 9.10.
வெற்றி நாள்: ஏப்ரல் 14,15 மே 12,13
நிறம்: மஞ்சள், வெள்ளை     எண்: 3,6


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !