கூனிச்சம்பட்டில் திருக்கல்யாணம்
ADDED :4650 days ago
புதுச்சேரி: கூனிச்சம்பட்டு திரவுபதியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நேற்று நடந்தது. தீமிதி திருவிழா, கடந்த 9ம் தேதியன்று, கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, மாலையில் அம்மன் வீதியுலா நடந்தது. கடந்த 19ம் தேதி திரு விளக்கு பூஜை நடந்தது. நேற்று (23ம் தேதி) 2 மணிக்கு திரவுபதியம்மன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில், அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில் பங்கேற்றவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. முக்கிய நிகழ்ச்சியாக நாளை (25ம் தேதி) காலை 11.00 மணிக்கு தேர்த் திருவிழா, 26ம் தேதி தீமிதி திருவிழா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்துள்ளனர்.