உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குழந்தைக்கு அடிக்கடி ரத்தகாயமா?

குழந்தைக்கு அடிக்கடி ரத்தகாயமா?

ஒரு நிமிஷம் கூட உன் கையும் காலும் சும்மா இருக்காதா? இவனுக்காக எத்தனை முறைதான் ஆஸ்பத்திரி போவது? என்று அடிக்கடி அம்மாவைக் கத்த வைப்பார்கள் சில குழந்தைகள். விளையாட்டுப் பிள்ளைகள் வீட்டில் இருந்தால், பெரியவர்களால் நிம்மதியாக எந்த வேலையும் செய்ய முடியாது. அங்குமிங்கும் ஓடுவார்கள். மாடிப்படியில் ஏறி குதிப்பார்கள். எங்காவது இடித்துக் கொண்டு ரத்தம் கொட்ட நிற்பார்கள். இப்படி சேஷ்டை செய்யும் குழந்தைகளுக்காக ஒரு பரிகாரத்தை பெற்றோர் செய்ய வேண்டும்.  சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரை தரிசிப்பதாக நேர்ந்து கொள்ளுங்கள். 3 அல்லது 5வாரங்கள் தொடர்ந்து அவருக்கு வெண்ணெய் சாத்தி வழிபடுங்கள். வெண்ணெய் போல் உருகிவிடும் அவன் உள்ளம். பிள்ளையின் பொறுப்பை அஞ்சனை மைந்தனிடம் ஒப்படைத்து விடுங்கள். இனி ரத்தக்காயம் உண்டாகாது என்று நீங்கள் நிம்மதியாய் இருக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !