பழநி கோயில் உண்டியல் வசூல் ஒரு கோடியே 82 லட்ச ரூபாய்!
ADDED :4746 days ago
பழநி: பழநி மலைக்கோயில், கார்த்திகை மண்டபத்தில் உண்டியல் எண்ணிக்கை நடந்தது. ரொக்கமாக ஒரு கோடியே 82 லட்சத்து 38 ஆயிரத்து 665 ரூபாயும். தங்கம் 755 கிராம். வெள்ளி 6 ஆயிரம் கிராம். வெளிநாட்டு கரன்சிகள் இருந்தன. வேல், செயின், வளையல், முருகனின் உருவம் பொறிக்கப்பட்ட தகடு, மோதிரம், நாணயம், திருமாங்கல்யம், ஆள் ரூபம், வெள்ளியாலான வேல், பாதம், கொலுசு, வீடு, குண்டு, பித்தளையாலான மணி, வேல், பாத்திரங்கள் போன்றவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். உண்டியல் எண்ணிக்கையின்போது, பழநிகோயில் இணை கமிஷனர் பாஸ்கரன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.