உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோதண்டராமர் கோவிலில் படிபூஜை விழா

கோதண்டராமர் கோவிலில் படிபூஜை விழா

செஞ்சி: செஞ்சி கோதண்டராமர் கோவிலில் படி பூஜை நடந்தது. கோதண்டராமர் கோவிலில் சித்திரை மாத படி பூஜை மற்றும் ராம ஆஞ்சநேயருக்கு சிறப்பு பஜனை நடந்தது. ராமமூர்த்தி வரவேற்றார்.கோதண்டராமர் அறக்கட்டளை நிர்வாகி துரைரங்கராமநுஜம், ஜெயராமதேசிகர், ஜானகி ஏழுமலை ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர். சங்கராபரணி ஆற்றங்கரை தீர்த்தவாரி படித்துறை படிகளுக்கும், ராஜகோபுர படிகளுக்கும் படி பூஜை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !