விநாயகர் கோவில் சதய உற்சவம்
ADDED :4558 days ago
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் விநாயகர் கோவிலில் அப்பர் சுவாமி சதய உற்சவம் நடக்கிறது. நெல்லிக்குப்பம் மெயின்ரோடு வரசித்தி விநாயகர் கோவிலில் அப்பர் சுவாமி சதய உற்சவ 10 நாள் திருவிழா நடந்து வருகிறது. தினமும் சிறப்பு அபிஷேகம் தீபாராதனை, அன்னதானமும், மாலை பாதிரிக்குப்பம் வெங்கடேசனின் ஆன்மிக சொற்பொழிவும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பரம்பரை தர்மகர்த்தாக்கள் நடன சபாபதி, சுந்தரமூர்த்தி செய்து வருகின்றனர். மே 2ம் தேதி தண்ணீர் பந்தல், 3ம் தேதி கட்டமுது, 4ம் தேதி மகா அபிஷேகமும், வீதியுலாவும் நடக்கிறது.