/
கோயில்கள் செய்திகள் / சத்தமாக பாடி வழிபடுவது, அமைதியாக மனதிற்குள் வழிபடுவது இதில் எது கடவுளுக்குப்பிடித்தமானது?
சத்தமாக பாடி வழிபடுவது, அமைதியாக மனதிற்குள் வழிபடுவது இதில் எது கடவுளுக்குப்பிடித்தமானது?
ADDED :4941 days ago
கடவுளுக்கு இரண்டுமே பிடித்தமானது தான். உங்களுக்கு விருப்பமான முறையில் வழிபடுங்கள். அவரும் விரும்பி ஏற்றுக் கொள்வார். இறைவன் ஆட்டம் பாட்டத்தையும் விரும்புகிறான் என்பதை தேவாரம், கொட்டு ஆட்டு பாட்டாகி நின்றாய் போற்றி என்று போற்றுகிறது. அதே ஈசன் தட்சிணாமூர்த்தியாக கல்லால மரத்தில் மோன தவநிலையில் ஆழ்ந்திருக்கிறார். அமைதியும் ஆரவாரமும் அவனுக்கு ஒன்று தான். இருப்பினும், இன்றைய ஒலிமாசு காலத்தில் அமைதியான வழிபாடே நல்லது என் சொந்தக்கருத்து.