உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குன்னூரில் மழை வேண்டி கிடா வெட்டி சிறப்பு பூஜை!

குன்னூரில் மழை வேண்டி கிடா வெட்டி சிறப்பு பூஜை!

குன்னூர்: மழை வேண்டி குன்னூர் நகரட்சி சார்பில் "கிடா வெட்டி சிறப்பு பூஜை செய்யப்பட்டது.குன்னூர் பகுதியில் போதிய மழை பெய்யாததால் சில மாதங்களாக வறட்சி காணப்பட்டது. விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. தேயிலை செடிகள் கருகி வரத்து குறைந்தது.மேலும், நீர் நிலைகள் வறண்டதால் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுபாடு ஏற்பட்டு 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. கடும் தண்ணீர் பற்றாக்குறையால் மக்கள் மழையை எதிர்பார்த்து காத்திருந்தனர்.சிறப்பு பூஜை: இந்நிலையில், குன்னூரில் மழை பெய்ய வேண்டி குன்னூர் நகராட்சி சார்பில் ரேலியா அணை பகுதியில் உள்ள ஸ்ரீ முனிஸ்வரன் கோயிலில் நேற்று "கிடா வெட்டி சிறப்பு பூஜை செய்யப்பட்டது. கமிஷனர் சண்முகம் தலைமையில் பூஜை நடந்தது. கவுன்சிலர்கள் சத்தார், கோபி மற்றும் நகராட்சி அலுவலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !