செல்லியம்மன் கோவில் விழா ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!
ADDED :4650 days ago
பாலவாக்கம்: கிராம தேவதை செல்லியம்மன் கோவிலில் நடந்த, 10 நாட்கள் விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஊத்துக்கோட்டை அடுத்த லட்சிவாக்கம் கிராமத்தில் அமைந்துள்ளது கிராம தேவதை செல்லியம்மன் கோவில். கடந்த ஒன்றாம் தேதி தெருக்கூத்து நடைபெற்றது. மறுநாள், இரண்டாம் தேதி உற்சவர் அம்மன், சிறப்பு அலங்காரத்தில் அங்குள்ள அனைத்து வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது, பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். கயிற்று கட்டில் வைத்து அதில் இனிப்பு வகைகள், முறுக்கு உள்ளிட்ட பொருட்களை வைத்து, தங்களது சக்திக்கு ஏற்றபடி, கோழி, ஆடுகளை பலியிட்டனர். அன்று இரவு ஸ்ரீசெல்லியம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.