உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துலாம்: பிள்ளைகள் பிடிவாதம்!

துலாம்: பிள்ளைகள் பிடிவாதம்!

நியாய தர்மத்தை கண்ணெனப் போற்றும் துலாம் ராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் சுக்கிரன் மற்றும் தினகதி சுழற்சியில் செயல்படுகிற சந்திரன் மட்டுமே இந்தமாதம் நல்ல பலன்களை வழங்குகின்றனர். வாழ்வின் வளர்ச்சிஅடைய வேண்டும் என்ற எண்ணம் மிகுந்திருக்கும். இளைய சகோதரர்களிடம் இருந்த கருத்து வேறுபாடு மே 28 குருபெயர்ச்சியானதும் சரியாகும். வீடு, வாகனத்தில் தகுந்த பாதுகாப்பு நடைமுறையை பின்பற்றுவது அவசியம். தாயின் தேவை அறிந்து நிறைவேற்றுவதால் குடும்ப ஒற்றுமை சீராகும். விலை அதிகம் உள்ள பொருட்கள் வேண்டுமென, பிள்ளைகள் பிடிவாதம் செய்வர். அவர்களை கண்டிப்பதில் நிதானமாக இருப்பது அவசியம். பூர்வசொத்து பராமரிப்பில் நம்பகமானவர்களை பணியமர்த்துவது சிரமம் தவிர்க்க உதவும். இஷ்டதெய்வ வழிபாடு செய்வதால் மனதில் நிம்மதியும் புதிய நம்பிக்கையும் உருவாகும். தம்பதியர் குடும்ப சிரமங்களை சரிசெய்வதில் அக்கறையுடன் செயல்படுவீர்கள். தொழிலதிபர்கள் குறிப்பிட்ட உற்பத்தி இலக்கை அடைய கால அவகாசம் தேவைப்படும். நிர்வாகச் செலவு அதிகரிக்கும். வியாபாரிகள் லாபம் குறைத்து விற்பதால் மட்டுமே விற்பனை அளவை அதிகரிக்க முடியும். பணியாளர்கள் தமக்குரிய பொறுப்பை உணர்ந்து செயல்பட்டு நிர்வாகத்திடம் பெற்ற நற்பெயரை பாதுகாத்திடுவீர்கள். சலுகைகள் ஓரளவு கிடைக்கும்.குடும்பப் பெண்கள் சேமிப்பு பணத்தை சிறு செலவுகளுக்கு பயன்படுத்தி கணவருக்கு உதவிகரமாக நடந்துகொள்வர். பணிபுரியும் பெண்கள் உடல்நல ஆரோக்கியம் பேணுவதால் மட்டுமே பணியில் ஆர்வம் வளரும்.  சுயதொழில் புரியும் பெண்கள் அளவான மூலதனத்துடன் உற்பத்தி, விற்பனையை சீராக்குவர். அரசியல்வாதிகள் குருபெயர்ச்சிக்குப்பிறகு புதியவர்களின் அறிமுகம் கிடைத்து முக்கிய செயல்களை நிறைவேற்றுவர். விவசாயிகளுக்கு அளவான மகசூல் கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் கிடைக்கிற பணவரவு திருப்திகரமாகும். மாணவர்களுக்கு விரும்பிய கல்லூரியில் இடம் பெற சற்று போராட வேண்டியிருக்கும்.

உஷார் நாள்: 6.6.13 இரவு 10.36- 9.6.13 காலை 9.50.
வெற்றி நாள்: மே 27, 28
நிறம்: சிவப்பு, ஆரஞ்ச்          எண்: 1, 9

பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபடுவதால் சிரமங்கள் சிட்டாய் பறக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !