உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆவரைகுளம் முத்தாரம்மன் கோயிலில் சித்திரை திருவிழா

ஆவரைகுளம் முத்தாரம்மன் கோயிலில் சித்திரை திருவிழா

வள்ளியூர்: ஆவரைகுளம் முத்தாரம்மன் கோயிலில் இன்று (13ம் தேதி) சித்திரை திருவிழா கொடியேற்றம் நடக்கிறது.வடக்கன்குளம் அருகேயுள்ள ஆவரைகுளம் முத்தாரம்மன் கோயில் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்கள் வெகு விமரிசையாக நடக்கிறது. கொடியேற்றத்தை முன்னிட்டு காலை 5 மணிக்கு கணபதி ஹோம பூஜையுயம், அதன்பின்பு காலை 8 மணிக்கு யானை பவனியுடன் கொடிப்பட்டம் ரதவீதி வழியாக ஊர்வலமாக வந்து கோயிலில் கொடியேற்றப்படுகிறது. மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, தீபாராதனை நடக்கிறது. அதன்பின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை நடக்கிறது. அதன்பின்பு சமய வகுப்பு மாணவிகள் சார்பில் சமய மாநாடு நடக்கிறது. இரவு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. 10 நாட்கள் நடக்கும் திருவிழாவில் தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், அன்னதானமும் நடக்கிறது. வரும் 22ம் தேதி 10ம் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடக்கிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு ஸ்ரீமுத்தாரம்மன், மஞ்சள் மாரியம்மன் வீதியுலா நிகழ்ச்சி நடக்கிறது. மதியம் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, தீபாராதனை பூஜை நடக்கிறது. மாலை 3 மணிக்கு சுடலையாண்டவருக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. இரவு 7 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. தேரோட்டத்திற்கு மாருதி குரூப் ஆப் கம்பெனி நிர்வாக இயக்குநர் பாலச்சந்தர் தலைமையில் மின்வாரிய அதிகாரி தங்கராஜ் தேரை வடம்பிடித்து துவக்கி வைக்கிறார். விழா ஏற்பாடுகளை நிர்வாக கமிட்டி தலைவர் தாமோதரன், செயலாளர் கணபதி, பொருளாளர் சிங்கராஜ், திருப்பணிக்கமிட்டி தலைவர் துரைச்சாமி, செயலாளர் ராமகிருஷ்ணன், பொருளாளர் முத்துசாமி மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !