தக்கலை பீரப்பா ஒலியுல்லா தர்ஹாவில் கொடியேற்றத்துடன் ஆண்டுப் பெருவிழா துவக்கம்
தக்கலை: கன்னியாகுமரி மாவட்டத்தில் முஸ்லீம்களின் முக்கிய தலங்களில் ஒன்றான தக்கலை பீரப்பா ஒலியுல்லா தர்ஹாவில் ஆண்டுதோறும் ஞானப்புகழ்ச்சி பாடல் மற்றும் நேர்ச்சை வழங்கும் நிகழ்ச்சி தக்கலை அஞ்சுவன்னம் பீர்முகம்மது அசோசியேஷன் சார்பில் நடந்து வருகிறது. அதில் குமரி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் ஏனைய மாவட்டங்களிலிருந்தும் கேரளாவிலிருந்தும் ஏராளமான மக்கள் வருவிது வழக்கம். அந்த தர்ஹாவில் இந்த ஆண்டின் பெருவிழா சனியன்று இரவு கொடியேற்று நிகழ்ச்சியுடன் துவங்கியது. இரவ 9 மணிக்கு கொடியேற்றப்பட்டது. நிகழ்ச்சியில் தக்கலை அஞ்சுவன்னம் பீர்முகம்மது அசோசியேஷன் தலைவர் ஹாஜி. அப்துல் ஜப்பார், துணைத் தலைவர்பீர் முகமது, செயலாளர் முகமது அபூ ஹனீபா, பொருளாளர் ஹாரிஸ் மற்றும் விழாக்குழு கன்வீனர் பீர்பிரதவுஸ், செயலாளர் முகமது மைதீன், துணைச் செயலாளர் றைஸ் சுபியான், பொருளாளர் மைதீன் பீர்முகமது, அதிமுக நகரச் செயலாளர் ஜஹபர் சாதிக் ஆகியோர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். சனியன்று மாலை முதல் 23ம் தேதி தினந்தோறும் மாலையில் மார்க்க பேரூரைகள் நடக்கின்றன. 24ம் தேதி இரவில் ஞானப்புகழ்ச்சி பாடலும் 25ம் தேதி மாலையில் நேர்ச்சை வழங்குதலும் 27ம் தேதி மூன்றாம் சியாரத் நேர்ச்சை வழங்குதலும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை தக்கலை அஞ்சுவன்னம் பீர்முகம்மது அசோசியேஷன் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.