தோணிமலையில் சஷ்டி பூஜை
ADDED :4663 days ago
கன்னிவாடி:தோணிமலை முருகன் கோயிலில், சஷ்டியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. முன்னதாக, பால், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர், சிறப்பு மலர் அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது. சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர். கன்னிவாடி சோமலிங்க சுவாமி கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில், சஷ்டியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.