பயம் போக்கும் பைரவர்!
ADDED :4921 days ago
சிவாம்சங்களில் ஒருவராகத் திகழ்பவர் பைரவர். சிவாலயங்களில் பரிவார தெய்வமாக இருந்து காவல் காப்பவர் இவரே. இவரை வைரவர் என்றும், வயிரவர் என்றும் சொல்வர். காசி, காஞ்சிபுரம், நாகப்பட்டினம், சீர்காழி கோயில் புராணங்களில் பைரவரைப் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. சிவபெருமானை அவமதித்த பிரம்மாவின் நடுத்தலையைக் கொய்து எடுத்து தண்டனை அளித்த பைரவமூர்த்தியைப் போற்றித் துதிப்போம், என்று கந்தபுராணம் இவரைப்போற்றுகிறது. செல்வச் செழிப்பில் திளைக்க சுவர்ணகர்ஷண பைரவரை வணங்குவர். கொங்கண முனிவர் சுவர்ணாகர்ஷண பைரவரை வழிபட்டு வந்தவர். சனிக்கிழமை இவரை வழிபட்டால் சனி தோஷத்தால் உண்டாகும் துன்பம் நீங்கும். ஞாயிறுமாலை ராகுவேளையும், தேய்பிறை அஷ்டமி திதியும் பைரவர் வழிபாட்டிற்கு உகந்தவை. இவரை தொடர்ந்து வழிபட்டு வந்தால் பயம் நீங்கி தைரியம் உண்டாகும்.