உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கெஞ்சும் அம்மாக்கள்!

கெஞ்சும் அம்மாக்கள்!

மோகன ÷க்ஷத்திரம் என்று போற்றப்படும் தலம் மதுரை மாவட்டத்திலுள்ள திருமோகூர். பிரம்மாண்ட புராணம், மாத்ஸ்ய புராணத்தில் இத்தலத்தின் பெருமை சொல்லப்பட்டுள்ளது. பாற்கடலைக் கடைந்தபோது, வெளிப்பட்ட  அமுதத்தின் ஒருதுளி இத்தலத்தில் விழுந்ததாக தலபுராணம் கூறுகிறது. இங்கிருக்கும் தெப்பத்திற்கு திருப்பாற்கடல் என்றும், பள்ளி கொண்ட பெருமாளுக்கு திருப்பாற்கடல்நாதன் என்றும் பெயர். பெருமாள் மேற்கே தலைவைத்து, கிழக்கே பாதம் நீட்டி, தெற்கே முகம் சாய்த்து பள்ளி கொண்டிருக்கிறார். ஐந்துதலை பாம்பான ஆதிசேஷன் குடைபிடிக்கிறது. ஸ்ரீதேவியும், பூமிதேவியும் குழந்தைகள் போல காலை முன்புறம் நீட்டி அமர்ந்துள்ளனர். அவர்களின் கைகள் பெருமாளை நோக்கி இறைஞ்சும் விதத்தில் அமைந்துள்ளன. தாயார்கள் இருவரும் பிரார்த்திக்கும் நிலையில் இருப்பது இங்குமட்டுமே. பக்தர்களின் குறை களைந்து அருள்புரியும் படி நமக்காக தாயார்களே இவ்வாறு பெருமாளை வேண்டுகிறார்கள். வைணவத்தில் இதை புருஷகாரம் என்பர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !