உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரம்மச்சாரி முருகன்!

பிரம்மச்சாரி முருகன்!

திருப்புகழ் பாடல் ஒவ்வொன்றின் முடிவிலும், பெருமாளே என்று முடிக்கிறார் அருணகிரியார். பெருமாள் என்றால் பெரிய ஆள். பேச்சுவழக்கில் பெருமாள் என்பது மகாவிஷ்ணுவைக் குறிக்கும். சிவசக்தியின் சொரூபமாகத் திகழும் முருகப்பெருமானை, மால் மருகன் என்று திருமாலின் மருமகனாகச் சொல்வர். பூர்வ ஜென்மத்தில் அமுதவல்லி, சுந்தரவல்லி என்ற பெயரில், திருமாலின் மகள்களாக இருந்தவர்களே தெய்வானையும், குறவள்ளியும் ஆவர். வடநாட்டில் சுப்ரமணியருக்கு மாமனாராக விஷ்ணு எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. அவர் அங்கு பூரண பிரம்மச்சாரியாகவே இருக்கிறார். அங்கு முருகப்பெருமானை கார்த்திகை நட்சத்திரத்திற்கு உரியவராக கார்த்திகேயன் என்று குறிப்பிடுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !