உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மனம் என்னும் பூந்தோட்டம்!

மனம் என்னும் பூந்தோட்டம்!

எண்ணம் என்னும் விதைகளே நம்மிடம் சொல்லாக, செயலாக வெளிப்பட்டு நிற்கிறது. நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நமது எண்ணங்கள் மனம் என்னும் வயலில் விதைகளாக விழுந்து முளைவிடத் தொடங்குகின்றன.  தெய்வப்புலவர் வள்ளுவர் எண்ணத்தின் வலிமையை,  எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்  திண்ணிய ராகப் பெறின்  என்று குறிப்பிடுகிறார்.  வயலில் ஒரு விதையை விதைத்துவிட்டால், அது மரமாக வளர்ந்து பல நூறு விதைகளைக் கொண்ட கனிகளைத் தருகிறது. நம் எண்ணம் நல்லதாக இருந்தாலும் சரி, தீயதாக இருந்தாலும் சரி. அவற்றுக்குரிய பலன் பன்மடங்காக நமக்கே கிடைக்கப்போகிறது. அதனால் மனதை பூந்தோட்டமாக வைத்திருங்கள். அதில் ஒழுக்கம் என்னும் வேலியைக் கட்டுங்கள். அன்பு, அமைதி, மகிழ்ச்சி, தூய்மை, வாய்மை, நேர்மை என்னும் நல்ல இனிமையான கனிதரும்
மரங்களையும், பூச்செடிகளையும் நட்டு வையுங்கள். சத்தியம் என்னும் கிணற்றினைத் தோண்டி நீர்பாய்ச்சுங்கள். அப்போது அருள் என்னும் தென்றல் வீசத் தொடங்கும். பூத்திருக்கும் புத்தம்புது வண்ணமலர்கள் அத்தென்றலில் அசைந்து ஆடும். அப்பூக்களையும், கனிகளையும் ஏற்றுக் கொள்ள இறைவனே உங்களைத் தேடி வருவான்.  -திருவள்ளுவர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !