உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பள்ளி கொண்ட நரசிம்மர்

பள்ளி கொண்ட நரசிம்மர்

நரசிம்மர் யோகநிலையில் தனியாகவும், தாயாரை மடியில் ஏந்தி லட்சுமிநரசிம்மராகவும் காட்சி தருவது வழக்கம். ஆனால், கடலூர் மாவட்டம் திருவதிகை சரநாராயணப்பெருமாள் கோயிலில் சயனக்கோலத்தில் காட்சி அளிக்கிறார். வக்ராசுரனை வதம் செய்த பெருமாள், அமைதி வேண்டி இத்தலத்தில் சயனத்தில் இருப்பதாக ஐதீகம். லட்சுமி தாயாரும் உடன் காட்சி தருவதால் இவருக்கு போக சயன நரசிம்மர் என்று பெயர். வேதாந்ததேசிகர் இவரைக் குறித்துதயாசதகம் என்னும் பாடலைப் பாடியுள்ளார். பிரதோஷ காலத்தில் இந்த நரசிம்மருக்கு அபிஷேக ஆராதனை சிறப்பாக நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !