மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
காரிமங்கலம்: காரிமங்கலம் அடுத்த பொம்மஹள்ளியில், ஸ்ரீ விநாயகர் மஹா சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நாளை (மே 31) நடக்கிறது.
விழாவையொட்டி, நேற்று காலை கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், இரவு, 9 மணிக்கு முதல் கால யாகபூஜை நடந்தது. இன்று காலை 9 மணிக்கு இரண்டாம் கால யாகபூஜையும், 11 மணிக்கு கோபுர விமான கலசம் வைத்தலும், மதியம் 12 மணிக்கு மஹா பூர்ணாஹூதி தீபாராதனையும், மாலை 6 மணிக்கு மூன்றாம் காலயாக பூஜையும், இரவு 10 மணிக்கு விநாயகர் மற்றும் மாரியம்மனுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடக்கிறது. நாளை, காலை, 7 மணிக்கு நான்காம் கால யாகபூஜையும், 8.45 மணிக்கு மஹா பூர்ணாஹூதியும், 9 மணிக்கு கலசங்கள் புறப்பாடும், 9.15 மணிக்கு மேல் 9.45 மணிக்குள் கோபுர கலசத்திற்கு கும்பாபிஷேகமும், 10.20 மணிக்குள் விநாயகர், மாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகமும் நடக்கிறது. திருப்பூர் மாவட்டம், கூனம்பட்டி கல்யாணபுரி ஆதீன 57வது குரு ஸ்ரீ ல ஸ்ரீ ராஜசரவணமாணிக்கவாசக சுவாமிகள் தலைமை வகித்து, கும்பாபிஷேகத்தை நடத்தி வைக்கிறார். காலை, 11 மணிக்கு மஹா அபிஷேகமும், தீபாராதனையும், பக்தர்களுக்கு அன்னதானம் நடக்கிறது. மாலை, 6 மணிக்கு ஸ்வாமி திருவீதி உலாவும், இரவு, 8 மணிக்கு அறுசுவை அன்னதானமும், 9 மணிக்கு கலை நிகழ்ச்சியும் நடக்கிறது. ஜூன்1ம் தேதி அதிகாலை, 5 மணிக்கு உற்சவ பெருமாள் திருவீதி உலாவும், 8.30 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குதலும், இரவு, 8 மணிக்கு பட்டிமன்றமும் நடக்கிறது. 2ம் தேதி காலை, 10 மணிக்கு மஞ்சள் நீராட்டு நடக்கிறது. ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.