உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் கோவில் விழா: பக்தர் வழிபாடு!

மாரியம்மன் கோவில் விழா: பக்தர் வழிபாடு!

ராசிபுரம்: ராசிபுரம்-புதுப்பாளையம் சாலையில், எல்லை மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும், பொங்கல் விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு விழா, கடந்த, 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, தினமும் சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. கடந்த, 27ம் தேதி இரவு, பூவோடு பற்ற வைத்தல் நிகழ்ச்சி நடந்தது. அதை தொடர்ந்து, மழை வேண்டி அர்ஜூனன் தபசு தெருக்கூத்து நடந்தது. நேற்று காலை, 11 மணிக்கு, பொங்கல் வைக்கப்பட்டது. முன்னதாக, செல்லியாண்டியம்மன் கோவிலில் இருந்து ஆண், பெண் பக்தர்கள் அலகு குத்தியும், அக்னி சட்டி எடுத்தும், அம்மனுக்கு தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். தொடர்ந்து, இரவு, 7 மணிக்கு மாவிளக்கு பூஜை நடந்தது. இன்று (மே 30) காலை, 6 மணிக்கு குண்டம் இறங்குதல், நாளை (மே 31) திருவிளக்கு பூஜையும், இரவு சத்தாபரணமும் நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !