உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புகழிமலையில் பவுர்ணமி கிரிவலம்

புகழிமலையில் பவுர்ணமி கிரிவலம்

வேலாயுதம்பாளையம்: புகழிமலை ஸ்ரீ பாலசுப்பிரமணி ஸ்வாமி கோவிலில் வைகாசி பவுர்ணமி விழா, சிறப்பு அபிஷேகம், கிரிவல பூஜைகள் நடந்தது.பிரசித்தி பெற்ற கரூர் மாவட்டம் புகழிமலை ஸ்ரீ பாலசுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில் வைகாசி விசாகம் மற்றும் வைகாசி பவுர்ணமி விழாவையொட்டி, மதியம் 12 மணிக்கு சிறப்பு உச்சிக்கால பூஜை நடந்தது. தொடர்ந்து பால், இளநீர், பன்னீர் , சந்தனம், பஞ்சாமிர்தம், தேன் உள்ளிட்ட பல்வேறு வாசனை பொருட்களில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பிறகு, கிரிவலம் துவங்கியது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !