வைகுண்ட பெருமாள் கோவிலில் கருடசேவை உற்சவம் கோலாகலம்!
ADDED :4510 days ago
காஞ்சிபுரம்: வைகுண்ட பெருமாள் கோவிலில், கருடசேவை உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. காஞ்சிபுரத்தில், மிக பழமை வாய்ந்த கோவிலும், 108 திவ்ய தேசங்களில் ஒன்றான, வைகுந்தவல்லி உடனுறை வைகுண்ட பெருமாள் கோவிலில், ஆண்டுதோறும் வைகாசி மாதம், பிரம்மோற்சவம் நடைபெறும். நடப்பாண்டு, பிரம்மோற்சவ விழா, கடந்த 3ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம், ஹம்ச வாகனமும், இரவு சூரிய பிரபை வாகன உற்சவமும் நடந்தது. நேற்று காலை 6:00 மணிக்கு, பிரபல உற்சவமான கருடசேவை உற்சவம் நடந்தது. இரவு, அனுமந்த வாகன உற்சவமும், இன்று காலை சேஷ வாகனமும், இரவு சந்திர பிரபை உற்சவமும், நாளை காலை, மோகினி அவதாரமும், இரவு, யாளி வாகன உற்சவமும் நடைபெற உள்ளன.