பழநியில் சிலையை வடிவமைத்த சித்தர் போகர் ஜெயந்தி!
ADDED :4507 days ago
பழநி: பழநி மலைக்கோயில், தண்டாயுதபாணி சிலையை வடிவமைத்தவர், சித்தர் போகர்; வைகாசி மாதம், பரணி நட்சத்திரத்தில் அவதரித்தவர். அவரது ஜெயந்தியை முன்னிட்டு, நேற்று, மலைக்கோயில் போகர் சன்னதியில், பச்சை மரகதலிங்கத்திற்கு, 16 வகை அபிஷேங்கள் செய்யப்பட்டன. பின், மரகதலிங்கம், புவனேஸ்வரிக்கு, சிறப்பு அலங்காரம் செய்து, பூஜைகள் நடந்தன. புலிப்பாணி பாத்திர சுவாமிகள் குழுவினர், ஏற்பாடுகளை செய்தனர்.